Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி காசி விஸ்வநாதர் கோவிலில் 1,008 ... ஜனவரி 6ல் தியாகராஜர் ஆராதனை விழா! ஜனவரி 6ல் தியாகராஜர் ஆராதனை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையை தெய்வமாக வழிபடும் நீலகிரி பழங்குடியின மக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 டிச
2014
11:12

ஊட்டி : நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள் மலைகளை தங்களின் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மலைகள் மற்றும் மலைத் தொடர்களை சிறப்பிக்கும் நோக்கில், டிச., 11ம் தேதியை,’யுனெஸ்கோ’ நிறுவனம், ’சர்வதேச மலைகள் தினம்’ என, அறிவித்தது.இந்த நாளில், இயற்கை அரணாக திகழும், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க, விழிப்புணர்வு இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி சுற்றுச்சூழல், கலாச்சார சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறியதாவது: நாட்டின் இயற்கை வள பாதுகாப்புக்கும், கங்கை, யமுனை, காவேரி என ஜீவ நதிகள் வற்றாமல் ஓடவும், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் தான் முக்கிய காரணம். மலைகள், விவசாயத்திற்கு முக்கியமான நீராதாரங்களாக விளங்குகின்றன. வளர்ச்சிப் பணி என்ற பெயரில் மலைகளில் கட்டுமானங்கள் அதிகரிப்பதை தடை செய்ய வேண்டும். மலைப் பகுதிகளில் மண் வளத்தை பாதிக்கும் ஓரின பயிர் சாகுபடி முறையை மாற்ற வேண்டும். வனப்பகுதிகளில், சூழல் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தற்போது நிலையிலேயே மலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு சிவதாஸ் கூறினார். பழங்குடியினர் தெய்வம்நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள், அவற்றை தங்கள் மூதாதையர்களின் வாழ்விடங்களாக, வழிப்பாட்டு தலங்களாக வணங்கி வருகின்றனர். தோடர் இன மக்கள், நீலகிரியில் உள்ள மல்லேஸ்வரர் முடி மலையையும், இருளர் இன மக்கள் ரங்கசாமி முகடு மலையையும் தங்களின் புனித தலமாக போற்றி வருகின்றனர். கோத்தர் இன மக்கள், கோத்தகிரி கேத்தரீன் நீர் வீழ்ச்சி மற்றும் அங்குள்ள மலையை வணங்கி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar