சபரிமலை:மண்டல காலத்தின் 27 நாட்களில் சபரிமலை வருமானம் 97.66 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட 1௨.௮௨ கோடி ரூபாய் அதிகம். மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை நவ., 16ல் திறந்தது; மறுநாள் மண்டல காலம் துவங்கியது. தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 27 நாட்களில் வருமானம் 97.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருமானம் 84.84 கோடி ரூபாய்.
இந்த ஆண்டு வருமான விபரம்:அபிஷேகம்- -ஒரு கோடி எட்டு லட்சத்து 640 ரூபாய்; அப்பம்-- ஏழு கோடி 30 லட்சத்து 25 ஆயிரத்து 850 ரூபாய்.அரவணை- 39 கோடி ௩7 லட்சத்து 79 ஆயிரத்து 380 ரூபாய்.காணிக்கை- 34 கோடி 98 லட்சத்து 6 ஆயிரத்து 451 ரூபாய்.