பெரிச்சிக்கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2014 03:12
திருப்புத்தூர் : திருப்புத்தூரிலிருந்து 10 கி.மீ., தொலைவில் பெரிச்சிக்கோயிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுகந்தவனேஸ்வரர் என்ற ஆண்டபிள்ளை நயினார் சமீபவல்லி, காசிவயிரவர்,சனீஸ்வரர் கோயில் உள்ளது.இங்கு மேற்கு நோக்கி ஒற்றை சனீஸ்வரராக காகம் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். டிச.16ல் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடக்க உள்ளது.இன்று காலை 8.30 மணிக்கு சனீஸ்வரர் முதல் முறையாக வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் சனிப்பெயர்ச்சியாகும் பகல் 2.17 மணிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும்.