ராமேஸ்வரம்: மார்கழி மாத உற்சவத்தை யொட்டி, இன்று முதல் ஜன., 14 வரை, ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4 முதல் 5 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். இரவு 8 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். காலை 5 மணிக்கு 22 புனித தீர்த்தங்களிலும் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.