பரமக்குடி : காட்டுப்பரமக்குடி புனித அந்தோணியார் சர்ச்சில், ஏசு பிறப்பு மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு பிரார்தனை நடந்தது. பரமக்குடி புனித அலங்காரமாதா
சர்ச் பங்குத்தந்தை செபஸ்தியான் தலைமை வகித்தார். உதவி பங்குத் தந்தை ஜோஸ்வா வரவேற்றார். அருட்சான்று நிலைய சகோதரர் அகஸ்டின் சிறப்பு செய்தி வாசித்தார். நிகழ்ச்சியில் நடனம், நாடகம் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டவர், குழந்தைகள், பெரியவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினார். சர்ச் வளாகத்தில் ஏசு பிறப்பை நினைவு கூறும் வகையில், குடில் அமைக்கப்பட்டிருந்தது.