Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை! சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழில் கீர்த்தனைகளை இயற்றிய கோடீஸ்வர அய்யர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
01:12

சென்ற நுாற்றாண்டின் துவக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் அங்கொன்றும், இங்கொன்றுமாய் கோபாலகிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம்பெற்ற போதும், பெரும்பான்மையான பாடல்கள் தமிழில் அமையவில்லை. இந்த நிலை, இன்று பெருமளவு மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இருவர். முதலாமவர் பாபநாசம் சிவன். இவர் பாடல்கள் சென்ற நுாற்றாண்டிலேயே பிரபலமடைந்து விட்டன. அவரது சமகாலத்தில் வாழ்ந்து, பல அரிய பாடல்கள் புனைந்த மற்றொருவர் கோடீஸ்வர அய்யர்.

நந்தனுாரில், 1869-ல் பிறந்த இவர்,- கவி குஞ்சர பாரதியின் பேரன். சிறு வயதில் பெற்றோரை இழந்த கோடீஸ்வர அய்யர், தன் பாட்டனாரிடம் சங்கீதமும், தமிழும் பயின்றதோடு, ஆங்கிலக் கல்வியிலும் தேர்ச்சி பெற்று பி.ஏ., பட்டமும் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய போதும், தன் பாட்டனாரின் கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்தும் வகையில், ஹரிகதா காலட்சேபம் செய்து வந்தார். இவரது மொழித் தேர்ச்சியும், இசைத் தேர்ச்சியும் ஒருங்கிணைந்து, எழிலுறு பாடல்களாய் வெளிப்பட ஆரம்பித்தன. தனது, 47-வது வயதில், 72 மேளகர்த்தா ராகங்களிலும், தான் புனைந்த பாடல்கள் தொகுப்புக்கு கந்த கானாமுதம் என்று பெயரிட்டு வெளியிட்டார்.கந்த கானாமுதத்தின் முகஉரையில் இடம் பெற்றிருக்கும் பிரபலங்களின் அணிந்துரைகள், அந்தக் காலகட்டத்தை உணர ஏதுவானவை.

பரூர்சுந்தரமையர்,குருடனுக்கு நேத்திரம் கிடைத்தது போல், உங்களிடம் சில கீர்த்தனைகளைக் கற்ற பிறகு, 72 ராகங்களையும், சர்வசாதாரணமாகவே பாடலாம் என்று உணர்ந்து கொண்டேன், என்கிறார். தமிழ் பாஷை, இசைக்கு பொருத்தமற்றது என்ற முடிவை பன்னாளாய் கொண்டுள்ள கொள்கை தப்பானது என்பதை இந்த நுால் எடுத்துக் காட்டுகிறது, என்கிறார் பாபநாசம் சிவன். Mr. Kotiswara Iyer made first comprehensive attempt to compose kirthanas in all Melas. The scientific value of his kirtanas is of high order and this publication is a landmark, என்கிறார், டி.எல்.வெங்கடராம அய்யர்.

தெள்ளு தமிழில் விளங்கும் இந்தக் கீர்த்தனங்களில் மிளிரும் ஸ்வராக்ஷரப் பிரயோகங்களை, தமிழ்த் தாத்தா உ.வே.சா., துவாரம் வெங்கடசாமிநாயுடு போன்றோர் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒவ்வொரு பாடலிலும், பாடல் அமைந்துள்ள ராகத்தின் பெயர் வருமாறு சாகித்யத்தை அமைத்து இருப்பது மற்றொரு சிறப்பு. இவ்வளவு சிறப்பினைப் பெற்று இருந்த போதும், இந்தக் கீர்த்தனைகள் கச்சேரியில் அதிகம் பாடப்படாமலேயே இருந்தன. அவற்றை புழக்கத்துக்குக் கொண்டு வந்த பெருமை வித்வான் எஸ்.ராஜத்தைச் சேரும். - லலிதாராம் - எழுத்தாளர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar