Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழில் கீர்த்தனைகளை இயற்றிய ... ஐயப்பன் கோயிலில் சனிப்பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்: கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
01:12

எம்.கே.பி.நகர்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோவில்களில் நேற்று நடந்த யாகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளில், ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் சக்திமிக்க சனீஸ்வரன், உச்சவீடான துலாம் ராசியிலிருந்து, நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு, விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரப்பலன்களை செய்தனர்.

எம்.கே.பி.நகரில் உள்ள ஓம் சக்தி விநாயகர் கோவிலில், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. பரிகார ராசிக்காரர்கள் யாகத்தில் பங்கேற்று வழிபட்டனர். எள் தீபம் ஏற்றியும், சனீஸ்வர பகவானை பக்தர்கள் வேண்டிக் கொண்டனர். வியாசர்பாடி, பாரிமுனை, மண்ணடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்கள் மற்றும் நவக்கிரக சன்னிதிகளில், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. அதில், ஏராளமானோர் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் சனி பகவானை தரிசித்தனர். ஆதம்பாக்கம், ஸ்ரீ தேவி நாகமுத்து மாரியம்மன் கோவிலில், ஆறரை அடி உயரம் கொண்ட மூலவர் சனி பகவானுக்கு நேற்று அதிகாலை, 4.30 மணி முதல், இரண்டு மணிநேரம் சிறப்பு சர்வ அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, புஷ்ப அலங்காரம் நடந்தது. காலை 9:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சனிப்பெயர்ச்சி நேரமான மாலை 2.44 மணிக்கு மூலவருக்கு அர்ச்சனை துவங்கி சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களின் பரிகார பூஜைகள் துவக்கப்பட்டன. சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில், உள்ளகரம், விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar