வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த, தேத்தாகுடி தெற்கு தெத்தேரியில் புதிதாக கட்டிவரும் ரயில் பாலம் அருகில், பழங்கால கருங்கல் சிவலிங்கம் சிலை கண்டுடெடுக்கப்பட்டது இது குறித்து தகவலறிந்த வேதாரண்யம் தாசில்தார் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் மங்களதாஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சிவலிங்கம் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஒன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கம் சிலையை, தாசில்தார் அலுவலகத்தில் வைத்துள்ளனர். உரிய விசாரணைக்கு பின், நாகை அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைக்கப்படும், என தாசில்தார் சாந்தி தெரிவித்தார்.