தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சவுந்திரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனையும், லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் நடத்தப்பட்ட தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.