பதிவு செய்த நாள்
29
டிச
2014
12:12
ஏகாட்டூர்: ஏகாட்டூர், காமாட்சியம்பாள் உடனாய கைலாசநாதர் கோவிலில், வரும் 5ம் தேதி, ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகாட்டூரில், காமாட்சியம்பாள் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 5ம் தேதி, ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம், மாணிக்கவாசகர் வீதி உலா நடந்தது. வரும் 4ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, அபிஷேகத்திற்கு வரிசை கொணர்தல் நிகழ்ச்சியும் அதன்பின், நள்ளிரவு 12:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
அதன்பின், 5ம் தேதி காலை, 5:00 மணிக்கு, மகா தீபாராதனையும், 9:30 மணிக்கு சுவாமி வீதி உலாவும் நடைபெறும்.