பாபநாசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பாபநாசம் பங்கஜவல்லி தாயார் உடனருளும், ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை முன்னிட்டு திருமஞ்சனம் மற்றும் 10 வகை பூ அலங்காரத்துடன் ஸ்ரீனிவாச பெருமாள், பங்கஜவல்லி தாயார் உடன் எழுந்தருளினார். அதிகாலை செர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாள் நாமத்தை சேவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் ஊழியர்கள், இறைபணி மன்றத்தினர் செய்திருந்தனர்.