ராஜபாளையம்: ராஜபாளையம் பெரியசுரைக்காய்பட்டி வேணுகான பஜனாலயத்தின் வைகுண்ட ஏகாதசி நூற்றாண்டு உற்சவவிழா, ஜன.1 ல் திருப்பாவை, திருவெம்பாவை பஜனையுடன் அதிகாலை 5 மணிக்கு துவங்கியது. காலை 7 மணிக்கு சிறப்புபூஜை நடந்தன. மாலை 6 மணிக்கு ராதா கிருஷ்ணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தன. வேணுகான மாதர் சங்கம் சார்பில் கும்மி, கோலாட்டம் நடந்தது. இரவு 9 மணிக்கு செல்வி ரசிகா பிரசாத் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தியாகப்ரம்ம பக்தஜன சபா குழுவினரின் திவ்யநாம பஜனைகள் நடந்தன.