மஞ்சூர் : மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கடந்த 27ம் தேதி மண்டல பூஜை கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து மகர விளக்கு காலபூஜைகள், புத்தாண்டு தினத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சிறப்பு அன்னதான பூஜை நடந்தது. இதற்காக அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பன் சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், விபூதி உட்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது.