பதிவு செய்த நாள்
08
ஜன
2015
12:01
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து, அறநிலைய துறை அதிகாரிகள், நேற்று மீட்டனர். சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலை, சர்வே எண்: 3333ல் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான, 24 கிரவுண்டு, 1,288 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தை, 99 ஆண்டுகள் குத்தகையாக சவுந்தரராஜன் என்பவர் பெற்றிருந்தார். குத்தகை காலம், 2000ம் ஆண்டு ஆகஸ்ட், 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் பின்னும், அந்த நிலத்தை அவர், பயன்படுத்தி வந்தார். அதையடுத்து, அறநிலைய துறை அவரை ஆக்கிரமிப்பாளராக அறிவித்து, நிலத்தை மீட்கும் நடவடிக்கையை துவங்கியது. அதன்படி, லஸ் சர்ச் சாலையில், கதவு எண்: 33/14ல், 499 சதுர அடி நிலத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, 60 லட்சம் ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.