திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச.21 ல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. ஜன.,1ல் நள்ளிரவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு, இரவு பத்து உற்சவம் துவங்கியது. 8ம் திருநாளான இன்று இரவு " வேடு பறி உற்சவமாக பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்தல் நடைபெறும்.மாலை 6.30 மணிக்கு பரமவாசல் திறக்கப்பட்டு, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி வலம் வந்து, கள்வரிடம் வழிப்பறிக்கு ஆளாவார். பின்னர் ஏகாதசிமண்டபம் எழுந்து கள்ளரை கட்டி அடித்தல், மான்யம் வாசித்தல் நடைபெறும்.