பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கொண்டாடினர். மாணவர்கள் வேட்டி அணிந்தும், மாணவியர் சேலையும், பாவாடை தாவணி அணிந்தும் வந்திருந்தனர்.மாணவர்கள், புதுப்பானையில் பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள், ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்தினர். அப்போது, பொங்கல் பானையை சுற்றி கும்மி பாட்டு பாடி, நடனமாடி பொங்கல் விழாவை கொண்டாடினர். சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.