பதிவு செய்த நாள்
23
ஜன
2015
12:01
ராசிபுரம் : ராசிபுரம், பொன் வரதராஜபெருமாள் கோவில், லட்சுமி ஹயக்ரீவ ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், கல்வியில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களது பெற்றோருடன் லட்சார்ச்சனை விழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவ ஸ்வாமிக்கு, லட்சார்ச்சனை விழா நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த விழாவில், அனுக்யை, விஷ்வக்ஷேன ஆராதனை, புன்யாகவசாம், மஹா சங்கல்பம், திரவிய ஹோமம், பூர்ணாகுதி, அபிஷேகம், மந்திர ஹோமம் ஆகியன நடந்தது. தொடர்ந்து, லட்சார்ச்சனை, மந்திர புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. இதில், ராசிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று ஸ்வாமியின் அருளை பெற்றனர்.