இந்தியாவிலே ஒரு சில இடங்களில் மட்டுமே லட்சுமணனுக்கு தனிக்கோயில் உள்ளது. அதில் ஒன்று மத்தியபிரதேசத்தின் தலைநகராக இருந்த நாக்பூரிலிருந்து வடகிழக்கு திசையில் ஏறக்குறைய 50 கி.மீ., தொலைவில் உள்ள ராம்தேக்கில் கோயில் அமைந்துள்ளது. ராமகிரி, சிந்தூர்கிரி, தபோகிரி என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருமை பெற்ற ராம்தேக் இன்றும் இயற்கை அழகோடு காட்சியளிக்கிறது. இந்த லட்சுமணன் கோயிலுக்குப் பின்னால் ராமர், சீதா ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. 600 வருடங்கள் புராதனமிக்க கோயில் இடைக்கால ஆரிய கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மற்றொரு பெருமையாக மகாகவி காளிதாசரின் நினைவுச் சின்னம் இங்கு அமைந்துள்ளது. இதே போல் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாயிலிருந்து மாலா செல்லும் வழியில் உள்ள திருமூழிக்களம் என்னுமிடத்திலும் லட்சுமணருக்கு கோயில் உள்ளது.