பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பரிவேட்டை உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2015 12:01
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், பரிவேட்டை உற்சவம் நடந்தது. சிற்றரசனாக முடிசூட்டப்பட்ட திருமங்கையாழ்வார், ஆடல்மா என்ற குதிரை மேல் ஏறிச்சென்று, சோழ மன்னரை வென்றதாக ஐதீகம். இதை ஆண்டுதோறும் இக்கோவிலில் பரிவேட்டை உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி நேற்று, குதிரை வாகனத்தில் பிரசன்னா வெங்கடேச பெருமாள் திருபட்டினம் போலகம் அம்புத்திடலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, மட்டையாடி உற்சவம் நடந்தது.