பதிவு செய்த நாள்
27
ஜன
2015
12:01
புதிய திருப்பாச்சூர்: புதிய திருப்பாச்சூர், லலிதா மகா திரிபுரசுந்தரி கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த, புதிய திருப்பாச்சூரில் உள்ள காமேஸ்வரர் உடனாய லலிதா மகா திரிபுரசுந்தரி கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம், காலை 10:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, கடந்த 23ம் தேதி, காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கி நடந்தன. அதன்பின், நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாக பூஜையும், அதை தொடர்ந்து, மாலை மூன்றாம் கால யாகபூஜையும், கோ பூஜையும் நடந்தன. பின், நேற்று காலை, நான்காம் கால யாக பூஜையும், அதன்பின், விமான கும்பாபிஷேகமும், மூல ஸ்தானத்திற்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தன.