Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாஞ்சாலியம்மன் கோவில் ... வ.பெரியக்குப்பத்தில் மகா கும்பாபிஷேகம்! வ.பெரியக்குப்பத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளாத்தூர் அம்மன் கோவிலில் தை திங்கள் சிறப்பு உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
12:02

ஆர்.கே.பேட்டை: தை மாத கடைசி திங்கட்கிழமையை ஒட்டி, நேற்று, வெள்ளாத்துார் அம்மன் கோவிலில் சிறப்பு உற்சவம் நடந்தது. இதில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில், வெள்ளாத்துார் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2005ல் நடந்தது. ஆண்டுதோறும் தை, ஆடி மாதங்களில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம், புத்துார், பாபாநாயுடுபேட்டை, நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, அம்மனை வழிபடுவது வழக்கம்.

தை மாத கடைசி திங்கட்கிழமையான நேற்று, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருந்தது. பக்தர்கள் மொட்டையடித்தும், மாவிளக்கு ஏற்றியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். காலை 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தன. பிற்பகல் 12:00 மணிக்கு, பொங்கல் படையல் வைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar