பதிவு செய்த நாள்
17
பிப்
2015
12:02
கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை நாட்டியாஞ்சலி நடக்கிறது. கடலூர், திருப்பாதிரிப்புலி யூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலில் இன்று இரவு மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அதனையொட்டி இன்று காலை 7, 9 மற்றும் 11:00 மணிக்கு பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், காலை 10:00 மணிக்கு உற்சவர் சந்திரசேகருக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு துர்க்கை மற்றும் யுகமுனீஸ்வரருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00, இரவு 8:00, 11:00 நள்ளிரவு 2:00 மற்றும் நாளை (18ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாய கிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 6:00 மணிக்கு அதிகார நந்தி கோபுர தரிசனத்தைத் தொடர்ந்து உற்சவர் வீதியுலா நடக்கிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை காலை வரை நடைபெறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையை பக்தர்கள் கண் விழித்து தரிசனம் செய்யும் பொருட்டு, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. அதனையொட்டி இன்று மாலை 4:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு பவானி குழுவினரின் வாய்ப்பாட்டும், 5:00 மணிக்கு கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியமும், 5:30 மணிக்கு ராஜமாதங்கி நாட்டியாலயா பள்ளி மாணவர்களும், 6:30 மணிக்கு ராதை ஸ்ரீ சிவாலயா கலைக்கூட மாணவர்களும், இரவு 7:30 மணிக்கு அஞ்லாலயா இசை நாட்டியப்பள்ளி மாணவிகளும், 8:30 மணிக்கு கடலூர் நக்ஷத்ரா நாட்டியாலயா பள்ளி மாணவிகளும், இரவு 9:30 மணிக்கு அன்னை சுப்பம்மாள் நாட்டியப் பள்ளி மாணவர்களும், 10:30 மணிக்கு சிவதாண்டவ நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம் நடக்கிறது. இரவு 11:30 மணிக்கு பஞ்கஜவள்ளி கிருஷ்ணன் மாணவிகளின் பரத நாட்டியமும், நள்ளிரவு 12:30 மணிக்கு ரகு சுந்தரம் மாணவர்களின் வயலின் இசை, 1:30 மணிக்கு மகா சிவராத்தி பெருமை மற்றும் சிவ தொண்டில் நாயன்மார்கள் என்ற தலைப்பில் புலவர் கலிய பெருமாளின் சொற்பொழிவு நடக்கிறது.