கோவை : கோவை அனுப்பர்பாளையம் பிள்ளையார் கோவிலில் அம்மையப்பர் நால்வர், திருமுறை திருவீதி உலா நடந்தது. விழா முதல் நிகழ்வான கொடியேற்றுதல் நிகழ்ச்சி காலை, 4:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து காலை, 5:30 மணிக்கு கோ பூஜையும், காலை, 7:00 மணிக்கு மகேசுவர பூஜையும் நடந்தன.பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் அருளுரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மையப்பர், நால்வர் திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட உலா, ரங்கப்ப கோனார் வீதி, நஞ்சுண்டாபுரம் ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன.