பதிவு செய்த நாள்
17
பிப்
2015
12:02
திருப்பூர் : முத்தணம்பாளையம் கோவில் சிவராத்திரி விழாவில், இன்று நள்ளிரவு மயான பூஜை நடைபெற உள்ளது. திருப்பூர், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில், இன்று மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்விக்கப்படுகிறது. இரவு 8:00க்கு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால் அபிஷேகம், கங்கணம் கட்டுதல், நந்தீஸ்வரர் அழைத்தல், வெற்றிலை பாக்கு பிடித்தல் உள்ளிட்டவை நடக்கின்றன.நள்ளிரவு 12:00க்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, தங்க கவச அலங்காரம், தீபாராதனையுடன் சிவராத்திரி பூஜை துவங்குகிறது. தொடர்ந்து, அம்மன் முகம் எடுத்து ஆடுதல், மயான பூஜை, அம்மன் வல்லான கண்டனை சம்ஹாரம் செய்தல் நடக்கிறது.நாளை அதிகாலை 5:00க்கு, கும்பத்தில் கத்தி நிற்கும் அலகு தரிசனமான, அதிசயமான சக்தி விந்தை அழைப்பு நடக்கிறது. 19ல், ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா; 20ல் பூவோடு; 21ல் பரிவேட்டை; 22ல் மாவிளக்கு, மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 24ல் மகா கும்ப பூஜை, பேச்சியம்மன் பூஜையுடன், சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.