வேலூர்: மாணவ, மாணவியரின் கல்வித் தரம் உயரவும், அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் நேற்று பிரம்மா ஹோமம் நடந்தது. ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனாக்களை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு முரளிதர ஸ்வாமிகள் வழங்கினார். தொழில் அதிபர்கள் மோகன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.