வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2015 12:02
நாகர்கோவில் : நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மார்ச் நான்காம் தேதி வரை பத்து நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. நேற்று இரவு ஒன்பது மணிக்கு சுவாமியும் அம்பாளும் புஷ்பக விமானத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழாவில் தினமும் இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 3-ம் நாள் விழாவில் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவில் காலை எட்டு மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பத்தாம் நாள் விழாவில் ஆராட்டு நடைபெற்று திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.