செஞ்சி: வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் மாசி திருத்தேர் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரம் அ ங்காளம்மன் கோவிலில் ஐந்தாம் ஆண்டு மாசி திருவிழா கடந்த 17ம் தேதி சிவராத்திரியன்று துவங்கியது. மறுநாள் அமாவாசையன்று மய õனக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. 24ம் தேதி மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் வடம் பிடித்தனர். அன்று மாலை தீ மிதி விழா, அன்னதானம் நடந்தது. தேர் திரு விழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சி றப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் புண்ணியமூர்த்தி உட்பட பலர் செய்தனர்.