பதிவு செய்த நாள்
25
பிப்
2015
12:02
வேலாயுதம்பாளையம் : வேலாயுதம்பாளையம் அருகே, நொய்யல் குறுக்குசாலை உள்ள, செல்வ விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த ஞாயிற்றுகிழமை காலை நடந்தது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது.காலை 10.30 மணிக்கு மேல் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.மாலை 6 மணிக்கு மேல் விக்னேஷ்வரர் பூஜை, புண்யாகம், கும்ப அலங்காரம், முதற்கால யாகவேள்விகள் மங்களநிறைவு வேள்வி, மங்கள பேரொளி வழிபாடு நடநத்தது.ஞாயிற்று கிழமை காலை, 7.30 மணிக்கு ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.