வேலூர்: வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் நவ கன்னிகைகள் மற்றும் மூலிகை வனத்தில் உள்ள முனீஸ்வரருக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களை நவ கன்னிகளாக பாவித்து அவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட சௌபாக்கிய பொருட்களை முரளிதர ஸ்வாமிகள் வழங்கினார்.