கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2026 12:01
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவில் ஆஞ்சநேயருக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நேற்று வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்-கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ராப்-பத்து உற்சவத்தின் போது ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா ராப்பத்து உற்ச-வத்தின் 7ம் நாளான நேற்று, சிங்கமுக ஆஞ்சநேயருக்கு காலையில் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கல பொருட்-களால் அபி ேஷகம் செய்து, திருவடி முதல் திருமுடி வரை வெண்ணெய் சார்த்தி, பழங்களால் அலங்கரித்து வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அனுமனை தரிசித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (ஜன.,6) வேடுபறி உற்சவம் நடக்கவுள்ளது.