Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜகோபால ஸ்வாமி கோவிலில் ... பகவதியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமேஸ்வர ஸ்வாமிகோவிலில் பாலாலயம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2015
11:03

கும்பகோணம்:கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு, சோமேஸ்வர ஸ்வாமி கோவில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, பாலாலயம் செய்து திருப்பணி தொடங்கியது."குடந்தை காரோணம் என போற்றப்படும் கும்பகோணம் சோமேஸ்வர ஸ்வாமி கோவிலில் மூலவராக சோமேசுவரரும், சோமசுந்தரி என்ற தேனார் மொழியாள் அம்பாளும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். மேலும், இக்கோவிலில் மாலீஸ்வரர், கல்யாண சுந்தரவிநாயகர், வள்ளி, தெய்வானை உடனாய ஆறுமுகர், கஜலட்சுமி, நடராஜர் ஆகிய ஸ்வாமிகள் சன்னதியும் உள்ளது.

இத்தலத்து அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்ததால், குடந்தைக் காரோணம் எனப் பெயர் பெற்றது.இக்கோவிலில் கடந்த, 2003ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, மகாமக திருவிழாவை முன்னிட்டு, 75 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, கோவிலில் பாலாலயம் செய்து, திருப்பணிகள் துவங்கியுள்ளது. திருப்பணியை, நகராட்சி தலைவர் ரத்னாசேகர் தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் முக்கிய பிரமுகர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கேரளாவின் கொடுங்களூர் அருகே ஜடாயுமங்கலம் என ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் ஜடாயுவுக்கு ... மேலும்
 
temple news
கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை ஏராளமான பக்தர்கள் சுருளி ... மேலும்
 
temple news
திருச்செந்துார்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இரண்டாவது நாள் யாகசாலை பூஜையுடன் ... மேலும்
 
temple news
மதுரை அழகர்மலை சோலைமலை மண்டபம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி பெருந்திருவிழா, இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar