Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ராமாசாது
கீழக்கொட்டையூர் - ராமாசாது
எழுத்தின் அளவு:
கீழக்கொட்டையூர் - ராமாசாது

பதிவு செய்த நாள்

17 மார்
2015
01:03

இறை இன்பத்தை தேடிச் செல்பவர்களுக்கு எல்லா இடத்திலும் அவன் காட்சி அளிக்கிறான்; ஆட்கொள்கிறான். அப்படிப்பட்ட உயரிய ஒரு மகான்தான் ஸ்ரீராமசாது! அவர் பிறந்தது பாகிஸ்தானில் அவருடைய ஜீவன் அடங்கி இருப்பது கும்பகோணம் அருகே உள்ள கீழக்கொட்டையூரில்! அவருக்கு 104 வயது ஆனபோது இறைவனடி சேர்ந்தார். மகா சமாதியான தினம்:10.07.1999. கீழக்கொட்டையூரில், புகழ்பெற்ற வள்ளலார் கல்வி நிலைய வளாகத்தின் உள்ளே காவிரி நதியை ஒட்டி. அவருடைய திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கே பளிங்குக் கல்லால் ஆன அவருடைய தத்ரூபமான திருவுருவம், நம்மை ஆட்கொள்கிறது. இறந்த உடலைப் புதைப்பதில் என்றென்றும் உடன்பாடு இல்லை ராமாசாதுவுக்கு கடவுள் கொடுத்த உடலை அவருக்கே அர்ப்பணம் செய்வதற்காகத்தான் நெருப்புக்கு இரையாக்குகிறோம். அதை விட்டுவிட்டு மண் சாப்பிட ஏன் கொடுக்க வேண்டும்? என்பார். அவருடைய சிஷ்யரான யாழ்ப்பாண ஸ்வாமிகள் என்பவர் 1980 வாக்கில் மகாசமாதி ஆகிவிட்டார். அவர் விஷயத்திலும் புதைப்பதா, எரிப்பதா என்பதே விவாதிக்கப்பட்டது. யாழ்ப்பாண ஸ்வாமியின் உடலைப் புதைப்பது என்று அவருடைய அபிமானிகள் சிலர் தீர்மானித்து அருகேயே ஓர் இடம் வாங்கிக் கடைசி நேரத்தில் அவரைப் புதைத்தனர். என்றாலும், ராமாசாது அதை ஏற்றுக்கொண்டார்.

தான் இறந்ததும் தனது உடல் எரியூட்டப்பட வேண்டும் என்று தீர்மானமாக முன்னரே ராமாசாது சொல்லி இருந்ததால் அவருடைய வாக்குக்கு இணங்க அவருடைய சிஷ்யர்கள் அப்படியே செய்தார்கள். அவருடைய அஸ்தியை ஒரு காலத்தில் சேகரித்து அதை பூமிக்குள் வைத்து, அதன் மேல் அவருடைய பளிங்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதைத்தான் அவருடைய அதிஷ்டானமான எண்ணி, அவருடைய பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமி மலைக்குச் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கீழக்கொட்டையூர். பிரதான சாலையிலேயே வள்ளலார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இந்த வளாகத்துக்குள்தான் ராமாசாதுவின் திருக்கோயில் இருக்கிறது. நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வரர் கோயில் மதில் சுவருக்குப் பின்னால் ராமாசாதுவின் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த இடம், ரம்மியமான ஒரு பிரதேசம். இவருக்கு பூஜை செய்யும் காலங்களில் வள்ளலார் இல்லத்தில் வசிக்கும் மாணவர்கள் பாடும் இறையருட்பாக்களின் இனிமையும் மரம், செடி, கொடிகளும், அதன் வழியாக வீசும் குளிர்ந்த காற்றும் அருகே கழித்துக்கொண்டு ஓடும் காவிரி நதியின் குளிர்ச்சியும் குயில்களின் கூவலுமாக மனதை வருடுகின்றன சூழல்!

ராமாசாதுவின் திருவுருவத்தின் முன்னால் பிரமாண்ட மண்டபத்தில் அமர்ந்து தியானித்து அவரை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள் அதிகம். பள்ளி வளாகம் ஒன்றுக்கு மிகவும் அமைதியான சூழலில் ராமாசாதுவின் திருக்கோயில் இருப்பதால், அனேகருக்கு இது அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூஜை வேளைகளில் அடிக்கடி வந்து செல்லும் உள்ளூர் பக்தர்களும் நாட்டில் எங்கெங்கோ வசிக்கின்ற இவருடைய சிஷ்யர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ராமாசாதுவின் அற்புதங்களை அறியும் முன் அவருடைய ஆரம்ப காலத்தைச் சற்று நோக்குவோம். பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய சியால்கோட் மாவட்டம். தேஸ்கா தாலுகாவில் உள்ள சேய்க்குவான் என்கிற கிராமத்தில் 1896. பிப்ரவரி 14ல் பிறந்தார். ராமாசாது சுந்தர்தாஸ் என்று அவருக்குப் பெயரிட்டனர் பெற்றோர். அவருக்கு காளிதாஸ், இந்தர்தாஸ் என்று இரு அண்ணன்கள். தந்தையார் பிண்டிதாஸ். தந்தையாருடைய தொழில் புரோகிதம் மற்றும் வைத்தியம் யுனானி வைத்தியத்தில் ஓரளவு தேர்ந்தவராக இருந்தார். பிண்டிதாஸ். புதல்வர்கள் இளவயதாக இருக்கும்போதே பிண்டிதாஸ் காலமானார்.

இதன்பின் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு. தாயிடம் சேர்ந்தது. தந்தை சொல்லிச் சென்ற வைத்திய முறைகளைக் குடும்பத்தினர். பின்பற்றி ஜீவித்துனர். தாயாருக்கு தெய்வப் பற்று உண்டு. ஆசாரம் மிக்கவர். அவர்களுடைய கிராமத்தின் வழியாக வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் மகான்களுக்கும் தன்னால் முடிந்த அளவு உணவு, உடை கொடுத்து உபசரித்தார். இந்தக் கைங்கர்யத்தில் பெரிதும் மகிழ்ந்தார். ராமாசாது தனது பள்ளிப் படிப்டை முடித்ததும். ஆங்கிலேய ராணுவத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். ஏனோ தெரியவில்லை. அவர் மனதில் சுதந்திரப் போராட்ட எண்ணம் தீவிரமாகத் தலைதூக்கியது. எனவே, தனது வேலையைத் துறந்தார். லாலா லஜபதிராய், வீரசாவர்க்கர் போன்றோரின் எழுச்சி மிக்க உரைகளைக் கேட்டு தனது 22வது வயதில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்; ஜாலியன்வாலாபாக் படுகொலையை நேரில் பார்த்திருக்கிறார்.

ராமாசாது, இறை உணர்வோடு, ஆன்மிகப் பாடல்களை அழகாகப் பாடுவார். சிறந்த நாடக நடிகரும்கூட! ராமாயண நாடகத்தில் அனுமனாகவும் மகாபாரத நாடகத்தில் விதுரனாகவும் சிவிலீலா நாடகத்தில் சிவனாகவும் நடிப்பார். நடிக்கும்போது பாத்திரத்தோடு ஒன்றி, பரவச நிலையை அடைந்துவிடுவார். தாயைப் போலவே சாதுக்களுக்கும் மகான்களுக்கும் பணிவிடை செய்வதில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய 24வது வயதில் அமிர்கவுர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இனிமையான இல்லற வாழக்கையில் கவுசல்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்தக் காலகட்டத்தில் ராமாசாதுவின் அண்ணன்கள் இருவரும். வாழ்வைத் துறந்து சன்னியாசம் எற்றனர். எனவே, சகோதரர்களின் மகள்களையும் தன் மகள் போலவே பாவித்து வளர்த்து வந்தார். அண்ணன்கள் இருவரையும் இறைப்பணியில் ஈடுபடுத்திய இறைவன். ராமாசாதுவை மட்டும் விட்டுவைப்பாரா, என்ன? ஞான மார்க்கத்துக்காக இந்த உலகில் அவதரித்தவர்கள் நீண்ட நாட்களுக்கு இல்லற வாழ்க்கையில் இருக்க முடியாது. கனிந்த பழம் மரத்தில் இருந்து தானாக விழும். அதுபோல் பக்குவப்பட்ட மனம், தானே ஞான மார்க்கத்தை அடையத் துடிக்கும். ஒரு கட்டத்தில், ஞான மார்க்கம் அவரை இழுத்தது. குடும்ப வாழ்வில் இருந்து வெளியேறினார். தனது ஆன்மிகத் தேடலைத் துவங்கினார். என்றாலும் தன் குடும்பத்தை ஒரு நாளும் தவிக்கவிட்டதில்லை. குறித்த காலத்தில் அவர்களுடைய தேவையறிந்து அனைத்தையும் முறையாகச் செய்தார்.

இளமைக் காலத்தில், அனமாநந்தர் என்ற துறவியை ராமாசாது சந்திக்க நேரிட்டது. ராமாசாதுவின் ஆன்மிகத் தேடலுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து ஊக்கம் அளித்தவர் இவர்தான். பின்னாளில், புண்ணிய யாத்திரை மேற்கொண்ட பல தலங்களை தரிசித்து வந்தார் ராமாசாது. பூரி ஜகந்நாதர் கோயில் பிராகாரத்தை வலம் வரும்போது பூஜ்யஸ்ரீ பரமானந்தர் என்கிற சாதுவை தரிசித்தார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே. இவர்தான் நம் குரு என்று நெளிந்தார் ராமாசாது இதே அனுபவத்தை அந்த குருவும் உணர்ந்தார். இப்படித்தான் இருவரும் குரு-சிஷ்யர்கள் ஆனார்கள். 1829ல் குருநாதர் பரமானந்தருடன் சென்னை வந்தார் ராமாசாது. அதன்பின் இருவரும் பாத யாத்திரை புறப்பட்டுக் கும்பகோணம் வந்தடைந்து. சக்கரப் படித்துறை அருகே ஒரு மண்டபத்தில் தங்கினர். சிஷ்யனுக்கான இடம் இதுதான் என்பதை குருநாதர் உணரந்தார். சில யோக வழிமுறைகளை ராமாசாதுவுக்கு உபதேசம் செய்துவிட்டு. ராமேஸ்வரம் புறப்பட்டார். ராமாசாது கும்பகோணத்திலேயே குடிகொண்ட கதை இதுதான்! கும்பகோணத்தில் இவர் இருந்த காலகட்டத்தில் சக்கரப் படித்துறை காவிரியில், தினமும் ராம நாம ஜபம் செய்தபடி ஸ்நானம் செய்வார். ராம் ராம் என்ற அவருடைய குரல் படித்துறை முழுவதும் எதிரொலிக்கும். இதன் பிறகே சுந்தர்தாஸ் என்கிற அவரை, ராமாசாது என்று பக்தர்கள் அழைக்கத் துவங்கினர் தவம் ஒன்றே ராமாசாதுவின் வாழ்க்கையைõக இருந்தது. தவம்தான். வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அற்புதங்களைத் தேடி அலையாதீர்கள். நாம் ஜபம் செய்து நாட்களைப் புனிதமாக்குங்கள் மனதை இறைவனிடம் செலுத்துங்கள் - இதுதான் ராமாசாது எல்லோருக்கும் சொல்லும் முக்கியமான செய்தி. விளம்பரத்தை விரும்ப மாட்டார். ஆடம்பரம் கூடாது; சாந்தமாக இரு; அதிகம் பேசாதே. பேசினால், சக்திதான் விரயம் ஆகும் என்று தன் சிஷ்யர்களிடம் அடிக்கடி சொல்வார்.

கும்பகோணத்துக்கு வந்த புதிதில். ஆடம்பரமான இடத்தில் அவரைத் தங்க வைப்பதற்குப் பலரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் ராமாசாது, ஒரு கீற்றுக் கொட்டகையில்தான் தங்கினார். சன்னியாசிக்கு இதுவே அதிகம் என்று கூறுவார். உடலுக்குள்ளே இருக்கும் சக்தியே மூலாதாரம். அதை மேலே கொண்டு வர வேண்டும். குண்டலினி யோகத்தை சாஸ்திரப்படி செய்யவேண்டும். குறுக்கு வழியைக் கடைப்பிடிக்கக் கூடாது. குண்டலினி மேலே எழும் உச்சக்கட்டத்தில் ஒரு மின்னல்கொடி உடல் முழுவதும் சட்டெனப் பரவுவதுபோல் இருக்கும். அந்த அனுபவம்தான். பிரம்மானந்தம் என்பார். சில நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து கும்பகோணம் வந்த குருநாதர் பரமானந்தர். ராமாசாதுவுடன் சில நாட்கள் தங்கினார். அப்போது, பலவிதப் பிணிகளுக்கு ஆட்பட்டிருந்த பக்தர்களுக்கு ஒருவகை கஷாயத்தை தயாரித்துத் தந்தார் ராமாசாது. இதைக்கண்ட குருதேவர் ஒரு நாள். இப்படி எல்லாம் கஷாயத்தைத் தயாரித்து நீ கொடுத்துக் கொண்டிருந்தால், உன்னை வேறு மாதிரி நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். நீ எதற்காக இந்த பூவுலகில் அவதரித்தாயோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று அறிவுறுத்தினார். அத்துடன் பரமானந்தரே அந்தக் கஷாயத்தை எடுத்துக்கொண்டு போய் காவிரி ஆற்றில் கொட்டிய நிகழ்வும் நடந்தது. இதன்பிறகு, குருநாதர், தனக்கான பணிகளை நிறைவேற்ற வடதேசம் சென்றார்.

குருநாதரைப் பிரிந்த ராமாசாது கும்பகோணம் காவிரிக்கரையில் உள்ள கோழித் தோப்பு என்னும் இடத்தில் தங்கினார். குருநாதர் தனக்கு இட்ட கட்டளையை இங்குதான் நிறைவேற்றினார். தன் உடலை வருத்தி, உணவும் உட்கொள்ளாமல் தொடர்ந்து தவ நிலையிலேயே பல நாட்கள் இருந்தார் ராமாசாது ஒருநாள் நள்ளிரவு! அவர் எதிர்பார்த்த இறைக்காட்சி, அன்னை பவானியின் வடிவில் அவருக்குக் கிடைத்தது. அவருள் உறங்கிக் கிடந்த பேருணர்வு எழுந்தது. பராமனந்த நிலையை அடைந்தார். மேலும், அன்னை பவானியுடன் பேசவும் செய்தார். அந்த நாட்களில் மவுனத்தை மேற்கொண்டிருந்த ராமாசாது. இரவு வேளைகளில் தனது அறைக்குள் அன்னை பவானியுடன் பேசுவதை. பணியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். பின்னாளில், இது பற்றி சந்தோஷத்துடன் பிற பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் யாத்திரை மேற்கொண்டார் ராமாசாது. எல்லாமே பாதயாத்திரைதான்! ஒரு முறை, ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பும்போது சாயல்குடிக்கு அருகே உள்ள தங்கம்மாபுரத்தில் சில காலம் தங்கினார். அங்கே பொட்டல்காடாக உள்ள ஓரிடத்தில் கருவேலமுட்கள் நிறைந்திருந்த பகுதியில் தவத்தில் அமர்ந்தார் ராமாசாது. பசி ஏற்படாமல் இருப்பதற்காக ஆவாரம் பூக்களையே பசித்தார். உடன் இருப்பவர்கள் உண்பதற்காக பிச்சை எடுத்தார். ஆடு, மாடு மேய்க்கிறவர்கள் அடிக்கடி இங்கு வந்து ராமாசாதுவை தரிசித்துச் சென்றனர்.

வீரபாகு செட்டியார் என்பவர். ராமாசாது இருந்த இடத்தை ஓரளவு சுத்தம்செய்து ஒரு கொட்டகை போட்டுத் தந்தார். வீரபாகு செட்டியாரின் தங்கை, கடும் வயிற்று வலியால் பல நாட்கள் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பல மேற்கொண்டும் அவர் குணமாகவில்லை. செட்டியார், இந்த மனக்குறையை ராமாசாதுவிடம் சொல்ல.... ஒரு நாள் கஷாயம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார் ராமசாது. பல நாள் கஷாயம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார் ராமசாது. பல வருடங்கள் வயிற்றுவலியால் அவதிப்பட்ட அந்த சகோதரி, கஷாயத்தைச் சாப்பிட்ட பின் முற்றிலும் குணமடைந்தார். இந்த அதிசயத்தைக் கண்டு, செட்டியார் மகிழ்ந்தார். தவிர, ஊர்க்காரர்கள் பலரும் வந்து ராமாசாதுவை தரிசித்தனர். அதன்பின் கும்பகோணம் வந்து சேர்ந்தார். தற்போது இவருடைய திருக்கோயில் அமைந்துள்ள கீழக்கொட்டையூர் இடமே நிரந்தர இருப்பிடமானது. 1980களில் ஸ்ரீராமர்ப்பண அறக்கட்டளை ராமாசாதுவின் அருளாசிப்படி துவங்கியது. இவர் தங்கியிருந்த தவச்சாலைக்கு சாதனா நிகேதனம் என்ற பெயர் சூட்டப்பட்டது. சாதகர்கள் தவம் இயற்றும் இடம் என்பதே இதன் பொருள்.

கீழக்கொட்டையூரில் அமைந்த சாதனா நிகேதனத்தின் அக்கரையில் சோலையப்பன் தெரு. வலையப்பேட்டை போன்ற பகுதிகள் நடுவே காவிரி நதி. அக்கரையில் இருந்து வரவேண்டும் என்றால், பரிசல் பயணம்தான். குழந்தை குட்டிகளுடன் பெற்றோர். பள்ளி செல்லும் குழந்தைகள் என்று பலரும் இதில் பயணிப்பது வழக்கம். காரணம், சுற்றி நடந்து சென்றால் நேரம் அதிகமாகும். காவிரியில் நீர் வரத்து அதிகம் இருந்தால். பரிசல் ஓட்டிக்கு சந்தோஷம். ஆனாலும், அவருடைய வாழ்வில் வறுமைதான். பரிசலில் பயணித்து ராமாசாதுவின் ஆசிரமத்துக்கு பக்தர்கள் அடிக்கடி வருவது வழக்கம். ஓய்வில் இருந்த ராமாசாதுவை ஒரு நாள் பரிசல் ஓட்டி சந்தித்து, வணங்கினார். சாமீ! உங்களை இன்னிக்குத்தான் ரொம்ப பக்கத்தில் இருந்து பாக்கிறேன். நிறையப் பேர் உங்கிட்ட வர்றாங்க. என்னென்னமோ நல்லது நடந்ததுன்னு சொல்றாங்க. எங்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்களேன் சாமீ! புன்னகைத்த ஸ்வாமிகள், பரிசல் ஒட்டியைத் தன் அருகே அழைத்தார். அவர் பயபக்தியுடன் ஸ்வாமிகளின் முன்னால் வந்து நின்றான். உங்களுக்கு நல்லது நடக்கணும், அவ்வளவுதானே? என்று அவனிடம் கேட்டார்.

ஆமா சாமீ.

காவிரியில குதிச்சு ஆழத்துக்குப் போயி. கொஞ்சம் கூழாங்கற்களை அள்ளிக்கொண்டு வா!

மறு கணம், ஆசிரமத்தின் அருகே இருந்த காவிரி நதியில் குதித்த அந்த ஆசாமி, கை நிறையக் கூழாங்கற்களுடன் மேலே வந்தான். ஈரம் சொட்டும் தன் உடலை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொண்டு, பவ்யமாக வந்து ஸ்வாமிகளிடம் கூழாங்கற்களைச் சேர்ப்பித்தான். அவற்றை வாங்கிக் கொண்டவர். பரிசல் ஓட்டியிடமும் அவனுடைய உறவினர் மூன்று பேர்களிடமும் தலா ஒரு கூழாங்கல்லைக் கொடுத்தார். பிறகு, அவர்களுடைய உள்ளங்கையை மூடிக்கொள்ளச் சொன்னார். பரிசல் ஓட்டியும் மற்ற மூவரும் ஒன்றும் புரியாமல். தங்களது வலது உள்ளங்கையை மூடிக்கொண்டனர்.

ஓரிரு நிமிடங்கள் கழிந்தன. இப்ப எல்லோரும் கைகளைத் திறந்து பாருங்கள் என்றார். ஆர்வம் மேலிடத் தங்களது வலது உள்ளங்கையைத் திறந்து பார்த்த ஆசாமிகள் பிரமித்தனர். கூழாங்கற்கள், தங்கக் கட்டிகளாக மின்னிக் கொண்டிருந்தன. பரிசல் ஓட்டியின் கண்களில் பிரகாசம் எது நிரந்தரமான வாழ்க்கை இல்லையோ. அதைத் தேடி அலைகிறீர்களே, மானிடர்களே!  என்பதாக, ஸ்வாமிகள் அவர்களைப் புன்னகையுடன் பார்த்தார். பட்டினத்தார் உட்பட சித்தர்கள் பலரும் தங்கத்தை ஆட்கொல்லி என்றுதானே சொல்லி வந்தார்கள் மானுடர்களுக்கு அது தெரியவில்லையே!

சந்தோஷத்தில் மிதந்த அவர்கள் ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் விழுந்தனர். அவர்களை ஆசீர்வதித்த ஸ்வாமிகள் கூழாங்கற்களைக் காவிரியில் இருந்து எடுத்து வந்தவனை அருகே அழைத்தார். எஞ்சி இருந்த கூழாங்கற்களை அவனிடம் கொடுத்தார். மீண்டும் அவன் முகத்தில் பிரகாசம் இவை அனைத்தும் தங்கமாகிவிடுமோ? என்று மற்றவர்களும் ஆர்வமாயினர்.

ஆனால் ஸ்வாமிகள் இந்தக் கற்களை எங்கிருந்து எடுத்தாயோ, அங்கேயே கொண்டு போய்ச் சேர்த்து விடு. நதிக்குச் சொந்தமானவை நதியிலேயே இருக்கட்டும். கிடைத்ததை வைத்து நிம்மதியாக இருங்கள்! என்றார்.

காவிரி ஆற்றில் மூழ்க இருந்த பக்தர்களை, தன் இடத்தில் இருந்துகொண்டே ஸ்வாமிகள் காப்பாற்றியது. அதிசயமான ஒரு நிகழ்வு! சேது அம்மாள், ராமாசாதுவின் தீவிர பக்தை (ராமாசாதுவுக்கு அதிகாலை நேரத்தில் தினமும் காபி எடுத்து வந்து தருவதால் இவரை காபியம்மாள் என்பார்கள்.) ராமாசாதுவின் காலத்தில் அவருக்கு அருகில் இருந்து கொண்டு செய்யும் பேறு பெற்றவர். ஸ்வாமிகளுடனான சிலிப்பான ஓர் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

என் மகள் கற்பகம் மற்றும் பேத்திகள் கார்கி கன்யா ஆகியோருடன் பேருந்தில் ஓர் இடத்துக்குப் பயணப்பட வேண்டி இருந்தது. நான் எப்போதும் வணங்கும் ராமாசாதுவிடம் முன்னதாக ஆசி பெற்றுச் செல்லலாம் என்று ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். என் மகள் மற்றும் பேத்திகளிடம் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, மூவரையும் ஆசிரமத்துக்கு வரச் சொன்னேன். எனது வீடு அமைந்திருக்கும் சோலையப்பன் தெருவுக்கும் ஆசிரமம் இருக்கும் கீழக்கொட்டையூருக்கும் நடுவே காவிரி நதி ஜோராக ஓடிக் கொண்டிருக்கும். பகல் நேரத்தில் பரிசல்காரன் இருப்பான். மற்ற நேரங்களில் நீச்சல் தெரியாதவர்கள் அந்த நதியைக் கடந்து வருவது சாதாரண செயல் அல்ல.

சில நேரங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். எனவே என் மகள் மற்றும் பேத்திகளிடம் சீக்கிரம் சென்று விடலாம். என்பதற்காக ஆற்றை கடந்து ஆசிரமரத்துக்கு வந்து விடாதீர்கள். சாலை வழியாகவே நடந்து வாருங்கள். போதிய அவகாசம் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்புங்கள் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். ஆனால், என் பேத்திகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

வீட்டில் இருந்து கிளம்புவதற்குத் தாமதம் ஆகிவிட்டதால். ஆற்றைக் கடந்தே வந்து விடலாம். நடந்து சென்றால் தாமதம் ஆகும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போது என் மகள். வேண்டாம் தண்ணீர் குறைவாக இருப்பது மாதிரி தெரியும். ஆனால், இறங்கினால் தான் விபரீதம் புரியும். சாலை வழியாகவே விறுவிறுவென்று நடந்து போய் விடலாம் என்று சொல்லி இருக்கிறாள். பேத்திகள் கேட்கவில்லை. இளரத்தம் ஆயிற்றே! ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கொஞ்ச நஞ்சம் இருந்த வெளிச்சமும் சத்தமாக விலகிவிட இருள் சூழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் சுழித்துக்கொண்டு ஓடியது. காவிரியில் தண்ணீர் கொஞ்சமாக இருப்பதாக அவர்களாகவே நினைத்துக்கொண்டு விட்டார்கள். ஆனால், ஆற்றில் அபரிதமாகவே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. வேகமும் அதிகம்!

அவர்கள், பாதி ஆற்றைக் கடப்பதற்குள் கழுத்தளவு தண்ணீர் வந்து விட்டது. பேத்தி கார்கி ரொம்பவே பயப்பட, கற்பகமும் கதிகலங்கிவிட்டார்கள். கன்யா, கற்பகத்தைக் கட்டிபிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். இருக்கிற சிரமம் போதாதென்று ஒரு வண்டு வேறு அவர்களைச் சுற்றியே பறந்து கொண்டிருந்தது. அப்போது, கன்யாவுக்கு ராமாசாதுவின் நினைவு வர.... கண்களை மூடி அவருடைய திருநாமத்தை ஜபித்தபடி நடக்க ஆரம்பித்தாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் ஜபித்துக்கொண்டே நடந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஆசிரமத்தில் நடந்ததுதான் மிகப்பெரிய அற்புதம்! நான் ஆசிரமத்தில் ஓர் அறையில் ஸ்வாமிகளின் முன்னால் அமர்ந்து ஜபத்தில் இருந்தேன். திடீரென ஸ்வாமிகள் ஜபத்தை நிறுத்திவிட்டு, வா! மெள்ள வா. இன்னும் ஏறி வா. பயப்படாதே. இன்னும் கொஞ்ச தொலைவுதான். வண்டெல்லாம் ஒண்ணும் பண்ணாது என்றெல்லாம் கைகளை ஆட்டி, சுவரை நோக்கிச் சொல்லிக் கொண்டிருந்தர். ஜபத்தில் இருந்த நான் விழித்துப் பார்த்து அதிசயித்தேன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ஸ்வாமிகள், அவ்வளவுதான் கரைக்கு வந்தாச்சே என்று அதே சுவரைப் பார்த்துப் புன்னகைத்தார். சில வினாடிகளுக்குள். மூவரும் ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததும், வெளியே வந்தேன். அவர்களை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று என்னங்கடீ இவ்வளவு லேட்? ஊரைச் சுத்திதானே வந்தீங்க? குறுக்கே போயிடலாம்னு காவிரியில் இறங்கி நடந்து வரலியே! என்று நான் கேட்க, மூவருடைய கண்களும் கலங்கின. என்ன ஏதென்று நான் குழம்பினேன். பிறகுதான், இன்றைக்குப் பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று நடந்த விஷயம் அனைத்தையும் மூச்சுவிடாமல் சொன்னார்கள்.

ஆற்றில் பரிதவிக்கும் தன் பக்தர்களின் கோரிக்கை காதில் விழுந்த அந்த வேளையில்தான் ஸ்வாமிகள், அவர்களைக் கைப்பிடித்துக் கரைக்கு பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார். அதனால்தான் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே சுவரைப் பார்த்துப் பேசி இருக்கிறார் என்று உணர்ந்த நான் வியந்து போனேன். எங்கே ஒரு பக்தை. அபாய கட்டத்தில் இருந்தபடி காப்பாற்றுமாறு தனது நாமத்தை ஜபிக்கிறான் என்பதை அறிந்து. ஸ்வாமிகள் காப்பாற்றிய இந்தச் செயல் என்ன மெய்சிலிர்க்க வைத்த ஒன்று. ஸ்வாமிகளது அறைக்குள் வந்த மூவரும் அவருடைய திருப்பாதத்தில் விழுந்தனர். புன்னகையுடன் அவர்களை ஆசிர்வதித்த ஸ்வாமிகள், அதான் கரைக்கு வந்துட்டியே. இன்னும் ஏன் கவலை? சந்தோஷமா பாட்டியோட ஊருக்குப் போயிட்டு வா என்று பேத்திகளை பார்த்துச் சிரித்தார்! அங்கங்கள் அனைத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் போடும் அகண்டயோகக் கலை. ராமாசாதுவுக்கும் கைவந்த கலையாக இருந்தது. ஆசிரம வளாகத்துக்குள் ராமாசாதுவின் கை, கால், மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் தனித்தனியே கிடந்ததை ஒரு பரிசல் ஓட்டி பார்த்துள்ளார் என்பது தகவல்.

துளசிதாசரால் இந்தியில் இயற்றப்பட்ட ஸ்ரீராமசரித மானசம் என்ற நூலின் மேல் ராமாசாதுவுக்கு அபாரமான ஈடுபாடு உண்டு. தனது பக்தர்களுள் ஒருவரான பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் என்பவரைக் கொண்டு அதைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்தார். இவருக்குப் பிறகு, தற்போது அந்தப் பணிகளை ராமாசாதுவின் பிரதான பக்தரான ராமதாசர் என்பவர் நடத்தி வருகிறார். அன்று ராமாசாது துவக்கிய இந்த சேவை. மாணவர் இல்லம் கல்விப் பணி, மருத்துவமனை, யோகாசன சாலை, தவச்சாலை, சமுதாய சேவை என்று இன்று மிகப்பெரிய இயக்கமாக இருக்கிறது. ராமாசாதுவின் பிறந்த தினத்தில் குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலையில் இருந்து இரவு வரை இவருடைய திருக்கோயிலில் தியானம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், ஆரத்தி என்று வழிபாடுகள் நடைபெறுகின்றன. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து. இங்கே வந்து மீளாத்துயில் கொண்டிருக்கும் ராமாசாதுவின் மறைவு என்பது உடலுக்கு மட்டும்தான். அவருடைய ஜீவன் இன்றும் இங்கே உலவிக் கொண்டிருப்பதை அவருடைய பக்தகோடிகள் மட்டுமே அறிவர்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar