பதிவு செய்த நாள்
25
ஜூன்
2011
10:06
மதுரை : மதுரை அய்யர் பங்களாவில், ஸ்ரீராமசுவாமி நவநீதகிருஷ்ணன் சுவாமி தேவஸ்தான மைதானத்தில், ஜூன் 28 மாலை 5 மணிக்கு ஸ்ரீனிவாச ஸ்ரீபத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து தர்மபிரசார பரிஷத் மற்றும் மதுரை ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாஜன சபை செய்து வருகிறது. சபைத் தலைவர் பாஸ்கரன், அமைப்பாளர் சுரேஷ், செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது : இந்நிகழ்ச்சியில் 75 ஆயிரம் பேர் பங்கேற்பர். "டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படும். பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதமாக லட்டு வழங்கப்படும். மைதானத்திற்கு எதிரேயுள்ள பங்களாவில் அன்று காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஸ்ரீவெங்கடேஸ்வரரை பொதுமக்கள் தரிசிக்கலாம். திருக்கல்யாணத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், இணை அதிகாரி யுவராஜ், பரிஷத் செயலாளர் வெங்கடேஷ் உட்பட வி.ஐ.பி.,க்கள் பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கணேசன், வெங்கடேசன், பாண்டியன், பாலாஜி செய்து வருகின்றனர், என்றனர்.