பதிவு செய்த நாள்
31
மார்
2015
12:03
ராசிபுரம் : காட்டூர் சக்தி விநாயகர், பாலமுருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். ராசிபுரம் அடுத்த காட்டூர் காட்டுக்கொட்டாயில் சக்தி விநாயகர், பாலமுருகன் கோவில், புதியதாக புனரமைக்கப்பட்டது. திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அதையடுத்த, நேற்று முன்தினம் ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்நது, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, ஹோமம் பலி, மஹா பூர்ணாகுதியும், சக்தி விநாயகர், பாலமுருகன் ஸ்வாமிக்கு ஹோமம் மற்றும் நவகிரஹ பூஜை, தீபாரதனையும் நடந்தது.நேற்று காலை, 6 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, மஹா பூர்ணாகுதி, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து து விநாயகர் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.