கும்பகோணம்: கும்பகோணம் ஜலசந்திர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பகோணம், ஜலசந்திர மாரியம்மன் கோவிலில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்டது. கடந்த, 28ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பரிவார தெய்வங்களுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு யாகசாலை பூஜை தொடங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நேற்று காலை, 7 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.