மதுரை : மதுரை தெற்கு மாசி வீதி தென்திரு ஆலவாயான் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.3ல் நடக்கிறது. எமதர்மன் வழிபட்ட சிவன், இங்கு மீனாட்சியம்மனுடன் அருள்பாலிக்கிறார். விழாவை ஒட்டி, இன்று காலை 9.15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜை, மாலை 5.00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, அஷ்ட பந்தனம் சாத்துதல் நடக்கிறது. ஏப்.3 காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 8.35 மணிக்கு கும்பாபிஷேகம், 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் செய்து உள்ளனர்.