பதிவு செய்த நாள்
28
ஜூன்
2011
11:06
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, சிவன் கோயில்களில் இன்று பிரதோஷம் மற்றும் கிருத்திகை நாளை முன்னிட்டு விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர், திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோயில், மப்பேடு சங்கீஸ்வரர் கோயில், திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோயில், பஞ்சேஷ்டி அகத்தீஸ்வரர் கோயில், திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோயில், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில், இன்று பிரதோஷ விழா நடைபெறும். இதையொட்டி, மாலை 4.30 மணிக்கு நந்திக்கு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்பாள் சமேதராக உற்சவர் வலம் வருவார். கிருத்திகையை ஒட்டி, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பெரும்பேடு முத்துகுமாரசுவாமி கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கிருத்திகை மற்றும் பிரதோஷ விழா ஒரே நாளில் வருவதால், மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.