பதிவு செய்த நாள்
18
ஏப்
2015
11:04
ஊட்டி : ஊட்டி காந்தல் மூவுலகரசியம்மன் கோவிலில் திருத்தேர் திருவிழா திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. நேற்று, பூச்சொரிதல் நிகழ்ச்சியும், இன்று மங்கள ஷண்டி ஹோமம், 19ம் தேதி திருக்கோவில் காப்பு கட்டுதலும், 20ம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை உபயதாரர்கள் சார்பில், அம்மன் திருவீதி உலா, அன்னதானங்கள் நடக்கிறது. மே மூன்றாம் தேதி மாலை 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மே நான்காம் தேதி மஞ்சள் நீராட்டு, ஐந்தாம் தேதி மதுரை வீரன் பூஜை, ஆறாம் தேதி கரக உற்சவம், ஏழாம் தேதி விடையாற்றி உற்சவம், எட்டாம் தேதி மறுபூஜை, மகா அபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறையினர், விழா குழுவினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.