காரைக்குடி: சுமங்கலி பெண்கள் சீர்சுமந்து வர, காரைக்குடி செக்காலை பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. ரைக்குடியில் நாகாத்தம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பெண்கள் இங்கு வழிபாடு நடத்துவர். சித்திரை முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. அருகில் உள்ள விநாயகர் கோயிலிலிருந்து, திருமணத்துக்கு வேண்டிய சீர் வரிசை பொருட்களை பெண்கள் கொண்டு வந்தனர். மேள, தாளம் முழங்க நாகராஜ சுவாமி, அம்மன் கழுத்தில் தாலி கட்டும் வைபவம் நடந்தது. முன்னதாக பெண்கள் தாலியில் மஞ்சள் பூட்டி, நாகாத்தம்மன் குடி கொண்டுள்ள அரச மரத்தில் கட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.