பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
12:04
விழுப்புரம்: விழுப்புரம் மகாலட்சுமி குபேரன் கோவிலில் அட்சய திருதியை ஹோமம் நடக்கிறது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, திருநகரிலுள்ள மகாலட்சுமி குபேரன் கோவிலில், அட்சய திருதியை தினத்தையொட்டி, இன்று (20ம் தேதி) மாலை 6:00 மணிக்கு மகா சங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி அக்னி பிரதிஷ்டை, இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை (21ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, 6:30க்கு புண்ணியாவாகனம், குபேர மூலமந்திரம், 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 8:30க்கு மகா திருமஞ்சனம், 9:30க்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.