சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் நடந்த அர்த்த ஜாம பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிதம்பரம், தில்லைக்காளியம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசை 167வது சிறப்பு அர்த்த ஜாம பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதனையெ õட்டி விநாயகர், பிரம்சாமுண்டி சன்னதியில் நெய் தீபம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து தில்லைக் காளியம்மனுக்கு தைலக்காப்பு செய்யப்பட்டு, பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் மகா அபிஷேகம் நடந்தது. தில்லைக்காளிக்கு வெண்பட்டு சாற்றப்பட்டு, வெட்டிவேர், விலாமுச்சி வேர், செவ்வரளி மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கனக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.