விக்கிரமசிங்கபுரம் : பாபநாசம் கோயில் உண்டியலில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 206 ரூபாய் வசூலாகியுள்ளது. பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி நெல்லை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) பொன்சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. பணியில் கோயில் இன்ஸ்பெக்டர் ராமையா, நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார்ராவ், கோயில் மணியம் பிரசன்னகுமார் மற்றும் பேச்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலர் சிவசங்கரன் தலைமையில் அணி எண்கள் 41, 42, 46ஐ சேர்ந்த என்.எஸ்.எஸ். மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். உண்டியலில் மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 206 ரூபாய் வசூலாகியுள்ளது.