காரைக்குடி ராகவேந்திரர் கோயிலில் பாதங்கள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2011 10:06
காரைக்குடி : ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி பாதங்கள் காரைக்குடியில் ராகவேந்திரர் கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி கோயில் உள்ளது. அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலில் பக்தர்களின் வழிபாட்டிற்காக ராகவேந்திரர் சுவாமியின் பாதங்கள் வைத்து வழிபாடு செய்வது என முடிவு செய்தது. அதன்படி, ஆறரை கிலோ எடையில் ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட "ஸ்ரீ ராகவேந்திரர் பாதங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த பாதங்கள் கோயிலில் பக்தர்களின் வழிபாட்டிற்காக விரைவில் நிறுவப்பட உள்ளது. சிற்பக்கலை ஆசிரியர் ஜே.குழந்தை கூறுகையில், ""கருப்பு, வெள்ளை புகைப்படத்தில் எடுக்கப்பட்ட பழமையான ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமியின் பாதங்கள் மாதிரி தோற்றம் கிடைத்தது. அதை கொண்டு அவரது பாதங்கள் வடிவமைக்கப்பட்டது. காரைக்குடியில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இந்த பாதங்கள் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்றார்.