கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவை முன்னிட்டு கோயில் அடிவாரப்பகுதியான தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில் விழா சித்ராபவுர்ணமி தினமான மே 4 ல் கொண்டாடப்படுகிறது.
இதற்காக நேற்று பளியன்குடியில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டியும் மாலை அணிந்தும் விரதத்தை துவக்கினர். முன்னதாக பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது. கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜ்கணேசன், பொருளாளர் முருகன் கலந்து கொண்டனர்.