பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
12:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வெங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்வாமிக்கு கல்யாணம் உற்சவம் நடந்தது.கடந்த, 21ம் தேதி மாலை ஸ்வஸ்திவாசனம், வாஸ்துபூஜை, வாஸ்துஹோமம், நவகும்ப ஸ்தபானம், நவகிரக ஆராதனை, மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தது. 22ம் தேதி மாலை சங்கல்பம், புஷ்பயாகம் நிகழ்ச்சியும், இரவு, 8 மணிக்கு நெய்வேத்தியம், மந்திரபுஷ்பம், மங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சி நடந்தது. விழாவின் மூன்றாவது, நாளான நேற்று, காலை, 10 மணிக்கு, வெங்கடேச பெருமாளுக்கு, கல்யாண உற்சவம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம், 12.30 மணிக்கு, திருப்பாவாடை சேவை, மதியம் 1 மணிக்கு மங்களஆரத்தி, தீர்த்த பிரசாதம் நிகழ்ச்சியும், மாலை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத, சீனிவாசா ஸ்வாமி நகர்வலம் நடந்தது.