புதுச்சேரி: கொட்டுப்பாளையம் இ.சி.ஆரில் உள்ள நாகாத் தம்மன் கோவில் 30ம் ஆண்டு உற்சவம் நேற்று துவங்கியது. காலை 9 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நடந்தது. இன்று 24ம் தேதி அம் மனுக்கு அபிஷேக ஆரா தனை, 12 மணிக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவம் நடக்கிறது. இரவு விநா யாகர், நாகாத்தம்மன், பாலமுருகன் சுவாமி வீதி யுலா நடக்கிறது. நாளை 25ம் தேதி மஞ்சள் நீர் வீதியுலா நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவி னர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.