மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதூர் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதூரில் கடந்த 17ம் தேதி, பிரம்மோற்சவ விழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஏழு நாட்கள் நடந்த உற்சவத்தின்போது பாரதம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சக்தி அழைக்கப்பட்டு, மதியம் 3:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று சாகை ஊற்றி, சுவாமியை வழிபட்டனர். நேற்று முன்தினம் சுவாமிக்கு ஊரணிப்பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று புதூரில் அனைத்து பகுதிகளிலும் அம்மன் தேர் வீதி உலா நடந்தது. விழாவில் புதூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழிபட்டனர்.