ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேணுகோபால ஸ்வாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. சத்தியமங்கலத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், வேணுகோபால ஸ்வாமி கோவில் உள்ளது. ருக்மணி, சத்யபாமா சமேதராக வேணுகோபால ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ஜூலை 8ல் மாலை 4 மணிக்கு, திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு அனுக்ஞை, புண்யாஹவாஜனை, கலச ஸ்தாபனம், தன்வந்திரி ஹோமம், 11 மணிக்கு மஹா திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஈரோடு, சத்தி, கோபி உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.