திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான நி்ர்வாக குழுதலைவராக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.சதலவாட கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவிலுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இப்பதவி கிடைக்க காரணமாக இருந்த தனது ஆதரவாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். தொடர்ந்து திருமலை தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்களாக சினிமா இயக்குனர் ராகவேந்திரராவ், எம்.எல்.ஏ.,க்கள் வீர ஆஞ்சநேயலு, சந்திர வெங்கட வீரய்யா, சாயன்னா, அனந்தலட்சுமி, லலிதாகுமாரி ஆகியோர் நியமி்க்கப்பட்டுள்ளனர்.