பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
01:04
காரிமங்கலம்: காரிமங்கலம், வாணியர் தெருவில் அமைந்துள்ள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி மற்றும் அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மே, 1ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி நாளை காலை, 9 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், இரவு, 7 மணிக்கு முதல் கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. 30ம் தேதி காலை, 8.30 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் காலயாகபூஜை, 10.30 மணிக்கு விமான கலசம் வைத்தலும், மாலை, 5 மணிக்கு, மூன்றாம் காலயாக பூஜை, இரவு, 9 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மே, 1ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு யாகபூஜை, காலை, 9.15 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு பரிவார கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை, 10.02 மணியளவில் மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 10.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.